அரசாங்கத்தில் பிளவா? இன்று அறிவிப்பு

5 years ago
tamilnewsline.com

அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டிருப்பதாக நீண்டகாலமாகப் பேச்சு அடிபட்டு வருகிறது.

அரசாங்கத்தில் இருந்துகொண்டே விமர்சனங்களை முன்வைத்தமைக்காக அண்மையில் இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து சுசில் பிரேம்ஜெயந்த பதவி நீக்கப்பட்டார்.

அதேபோன்று வியாழக்கிழமை விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் பதவி நீக்கப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், விமல், கம்மன்பில, வாசுதேவ, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஆளுங் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை தங்களது நிலைப்பாட்டை அறிவிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

எவ்வாறாயினும், அரசாங்கத்தில் இருந்து விலகி தனித்து செல்லும் அறிவிப்பு ஒன்று அவர்களிடம் இருந்து வரப்போவதில்லை என உள்வட்டாரத் தகவல்கள் அய்வரி செய்திகளுக்கு தெரிவித்தன.