உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்ததை அடுத்து, ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை மேற்குலக நாடுகள் விதித்து வருகின்றன.
அண்மையில் அமெரிக்காவும் பிரித்தானியாவும் ரஷ்யாவின் எண்ணெய்க்கு தடைவிதித்தன.
தற்போது ரஷ்யா தமது பங்குக்கு முக்கியமான 200க்கும் அதிகமான பொருட்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.
தடைவிதிக்கப்பட்ட பண்டங்களுள் தொலைதொடர்பு சாதனங்கள், மருத்துவ, விவசாய, மின்சார மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் என்பவும் அடங்கும்.
இந்த தடையானது இந்த ஆண்டு நிறைவடையும் வரையில் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
