நாட்டில் எரிவாயுவுக்கான தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
எரிவாயு இறக்குமதி செய்ய வங்கிகள் கடன் நாணய கடிதங்களை திறக்க அனுமதி வழங்க மறுக்கின்றன.
இதனால் எரிவாயுவை இறக்குமதி செய்யவோ விநியோகிக்கவோ முடியாத நிலையில் இருப்பதாக எரிவாயு இறக்குமதியில் ஈடுபடுகின்ற litro மற்றும் laugfs ஆகிய இரண்டு நிறுவனங்களும் அறிவித்துள்ளன.
ஏற்கனவே நாட்டில் எரிபொருளுக்காக மக்கள் வரிசையில் நிற்கின்ற நிலையில், இந்த நிலை தீர்க்கப்படாவிட்டால் எரிவாயுவுக்கும் வரிசையில் நிற்க நேரும் என சந்தேகிக்கப்படுகிறது.
