தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பான இரண்டு சம்பவங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
பரீட்சைகள் ஆணையாளர் எல்.எம்.டி. தர்மசேன இதனைத் தெரிவித்துள்ளார்.
கம்பஹாவில் இரண்டு மாணவர்களுக்கு பரீட்சை வினாத்தாள்கள் வழங்கப்படாமை மற்றும் பத்தேகமவில் ஆறு மாணவர்களின் விடைத்தாள் உரிய நேரத்திற்கு முன்னதாகவே சேகரிக்கப்பட்டமை தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பரீட்சை நிலையங்களின் பிரதானிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
