இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி வரும் சனிக்கிழமை பெங்களூர் – M சின்னசாமி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இதன்போது 100% பார்வையாளர்களை அனுமதிக்க கர்நாடக மாநில கிரிக்கட் சங்கம் தீர்மானித்துள்ளது.
அந்த மாநிலத்தில் கொவிட் நோயாளர் எண்ணிக்கை பெருமளவில் குறைவடைந்ததால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 12 முதல் 16 வரை பெங்களூரில் இந்த போட்டி இரவு – பகல் ஆட்டமாக இடம்பெறுகிறது.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியை பதிவு செய்யிருந்தமை குறிப்பிடத்தக்கது.
