கால்பந்து – ஜப்பானின் கனவை முறியடித்த சீனா

4 years ago
SPORTS
(38 views)
aivarree.com

ஆசியக் கால்பந்து சம்மேளன (AFC) தொடரில் தொடர்ந்து 3வது முறையாகவும் இறுதிப் போட்டிக்கும் தெரிவாகி சாதனை படைக்கும் வாய்ப்பை ஜப்பான் மகளிர் அணி இழந்தது.


இந்த தொடரின் அரையிறுதியில் சீன மகளிர் அணியுடன் மோதியது.
இதில் சீனாவிடம் 4க்கு3 என்ற பெனால்டி அடிப்படையில் நடப்பு சாம்பியனான ஜப்பான் தோற்றது.


முன்னதாக இந்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா 1 கோல்களைப் பெற்றிருந்த நிலையில், மேலதிகமாக வழங்கப்பட்ட காலத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களைப் பெற்றுச் சமப்படுத்தி இருந்தன.


கடந்த இரண்டு தடவைகள் இந்த தொடரில் ஜப்பான் கிண்ணம் வென்றிருந்த நிலையில், மூன்றாவது கிண்ணத்தை வெல்லும் கனவு அற்றுப் போனது.