வெற்றிலைப்பாக்குடன் புகையிலை விற்பனைக்கு தடை: சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம்

5 hours ago
Sri Lanka
(6 views)
aivarree.com

வெற்றிலைப்பாக்குடன் சேர்த்து புகையிலையை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக இனி சட்டம் கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் இந்த விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

நாட்டில் புகையில்லாத, மெல்லும் தன்மையுடைய புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத்தை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2,000 ரூபா அபராதம் அல்லது
ஆறு மாதங்கள் வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.