பசிலும் கப்ராலும் கலந்துரையாடுவதில்லை | ரவுஃப் ஹக்கீம் சாடல்

4 years ago
Sri Lanka
(32 views)
aivarree.com

தற்போதைய நெருக்கடிக்கு, பசில் ராஜபக்‌ஷ மற்றும் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு இடையிலான முரண்பாடே காரணம் என்று கருத்து படும் வகையில், முன்னாள் அமைச்சர் ரவுஃப் ஹக்கீம் சபையில் உரையாற்றினார்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் டொலர் ஒன்றுக்கு 38 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்க அமைச்சரவை தீர்மானித்தது.

ஆனால் 20 ரூபாய் மட்டுமே வழங்கப்படும் என வேறொரு அமைச்சர் கூறுகிறார்.

(பொருளாதார விடயம் தொடர்பாக) பசில் மற்றும் கப்ரால் ஆகியோர் கலந்துரையாடுவதில்லை என்பதே இதிலிருந்து தெரிகிறது.

சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை தடுத்து, நாட்டின் இன்றைய நிலையை ஏற்படுத்தியமைக்கு அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பு கூறவேண்டும், என்று ரவுஃப் ஹக்கீம் கூறினார்.