யாழ் மீனவர் மீது இந்திய மீனவர்கள் தாக்குதல் – பருத்தித்துறையில் பதட்டம்

4 years ago
Sri Lanka
(50 views)
aivarree.com

யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடலில் அத்துமீறிப் பிரவேசித்த இந்திய மீனவர்கள் சிலர், யாழ்ப்பாண மீனவர்களின் படகு மீது பெற்றோல் குண்டுவீச்சுத் தாக்குதல் நடத்தி இருப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் கூறினார்.


இதில் காயமடைந்த யாழ் மீனவர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, பருத்தித்துறை – சுப்பர் மடம் பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. 


மேலும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகின் மடிவலையை யாழ்ப்பாண மீனவர்கள் பறிமுதல் செய்து கரை வந்துள்ளனர். 


குறித்த இழுவைப் படகு மடியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ள போதும், இந்திய மீனவர்கள் அடாத்தாக இலங்கை கடற்பரப்பில் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர்.


இதேவேளை யாழ்ப்பாணத்தின் வௌ;வேறு கடற்பகுதிகளில் 3 இந்திய மீனவர்களின் படகுகளைத் தடுத்துள்ள கடற்படையினர், பல மீனவர்களைக் கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Reported by
Pradeepan – Jaffna