மறு அறிவித்தல் வரை மின்சார துண்டிப்பு இல்லை

5 years ago
tamilnewsline.com

மறு அறிவித்தல் வரையில் அட்டவணைப் படுத்தப்பட்ட மின்சார துண்டிப்பு இல்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. 


நுரைச்சோலை மின்னுற்பத்தி மையத்தில் பழுதடைந்திருந்த ஒரு மின்முனையம் மீளச் செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில், அதன் ஊடாக 120 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படுகிறது. 


அத்துடன் அடுத்த மாதம் க.பொ.த. உயர்தர பரீட்சை இடம்பெறவுள்ளது.


அவற்றைக் கருத்திற்கொண்டு, மின்சாரத்தைத் துண்டிக்க அவசியம் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.