ரயில் மோதி மகள் பலி / தந்தை காயம் / யாழில் சம்பவம்

4 years ago
Sri Lanka
(60 views)
aivarree.com

யாழ்ப்பாணம் – கொக்குவில் ரயில் நிலையத்திற்கு அருகில் ரயில் மோதி 22 வயதான இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்.காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற குளிரூட்டப்பட்ட ரயில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தி என்ற இளம்பெண்ணே உயிரிழந்தார்.

சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தந்தை ராஜ்குமார் என்பவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.