முல்லைத்தீவு – ஓட்டுசுட்டான், நெல்லிமுறிப்பு குளத்தில் விழுந்த காட்டு யானை ஒன்று எழ முடியாத நிலையில் உயிருக்கு போராடி வருகிறது.
காலில் சுடப்பட்ட காயங்களுடனான அந்த யானை குளத்தில் வீழ்ந்த நிலையில் கடந்த 18ஆம் திகதி முதல் எழ முடியாத நிலையில் உள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
யானையின் காயம் குணமடைந்த பின்னரே அதனை குளத்தில் இருந்து வெளியேற்ற முடியும் என வனவள திணைக்கள அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதேபோன்று திருகோணமலையிலும் நீர்நிலை ஒன்றில் விழுந்து நீண்ட நாட்களாக மீட்கப்படாதிருந்த யானை ஒன்று இறுதியாக மரணித்தமை குறிப்பிடத்தக்கது.
