13 நாட்களாக வாய்க்காலில் சிக்கிய யானை உயிரிழப்பு / திருமலையில் சம்பவம்

5 years ago
tamilnewsline.com

திருகோணமலை – பன்குளம் பகுதியில் வாய்க்காலில் விழுந்து எழ முடியாமல் இருந்த யானை திங்கட்கிழமை (20) மாலை உயிரிழந்தது.

கடந்த 7ஆம் திகதி முதல் பன்குளம் பிள்ளையார் கோயிலுக்கு அருகில் உள்ள தனியார் காணியொன்றின் வாய்க்காலில் குறித்த யானை விழுந்து எழ முடியாமல் இருந்தது.

காலில் ஏற்பட்டிருந்த காயம் காரணமாக யானையால் எழ முடியாதிருந்ததாகவும், அதனால் அதற்கு வனவளத்துறை அதிகாரிகள் சிகிச்சை வழங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில் கடந்த 13 நாட்களாக வழங்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்தது.