நாடு முழுவதும் திங்களன்று (21) மின் தடையை அமுலா க்க பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) ஒப்புதல் அளித்துள்ளது.
போதிய அளவு மின்சாரம் உற்பத்தி செய்யப்படாததால் இலங்கை மின்சார சபை (CEB) கோரியமைக்கு இணங்க இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி திங்கள் காலை 8.30 முதல் மாலை 7.30 வரை நாடளாவிய ரீதியில் 01 மணித்தியாலம் சுழற்சிமுறையில் மின் தடை அமுலாகும்.
தென் மாகாணத்தில் மட்டும், காலை 8.30 முதல் மாலை 4.30 வரை 3 மணிநேர மின் தடை அமுலில் இருக்கும்.
– ஜானக ரத்நாயக்க
தலைவர்- PUCSL
