இலங்கை கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து கூறிய மலிங்க

5 years ago
tamilnewsline.com

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 4 20/20 போட்டிகளில் இலங்கை அணி தோற்றிருந்தாலும் ஐந்தாவதும் இறுதியுமான போட்டியில் வெற்றி பெற்று இருந்தது.

இந்த தொடருக்கு இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகராக முன்னாள் வீரர் லசித் மலிங்க செயற்பட்டிருந்தார்.

இலங்கை அணி இறுதி போட்டியில் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சியையும் பாராட்டுக்களையும் தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கடந்த இரண்டு வார காலமாக இலங்கை கிரிக்கெட் அணியுடன் சிறப்பான அனுபவத்தை பெற்றுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியாவுக்கு சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளும் இலங்கை அணிக்கு தமது வாழ்த்துக்களையும் லசித் மலிங்க கூறியுள்ளார்.