மனித உரிமைகள் பேரவை அமர்வு / இம்முறை என்ன நடக்கும்?

5 years ago
tamilnewsline.com

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினது 49ஆவது அமர்வு இந்த மாதம் 28ம் திகதி ஆரம்பித்து, மார்ச் மாதம் இறுதி வரையில் தொடரும்.


எதிர்வரும் மார்ச் மாதம் 3ம் திகதி இலங்கை தொடர்பான தமது அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெட் முன்வைப்பார்.


இம்முறை இலங்கை தொடர்பான வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படாது. 


மாறாக இந்த வருடம் செப்டம்பர் மாத அமர்வின் போது இலங்கை தொடர்பாக புதிய பிரேரணை ஒன்றைக் கொண்டுவருவதற்கான முற்கூட்டிய பேச்சுவார்த்தை நடைபெறும். 


இம்முறை மாநாட்டில் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.