இலங்கை வருகிறார் அமெரிக்க உயர் மட்ட அதிகாரி

5 years ago
tamilnewsline.com

ஜெனீவாவில் இந்த மாத இறுதியில் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு ஆரம்பமாகவுள்ள சூழ்நிலையில், அடுத்தமாதம் அமெரிக்க முக்கிய ராஜதந்திரி ஒருவர் இலங்கை வருகிறார்.

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி ராஜாங்க செயலாளர் டொனால்ட் லூ, மார்ச் மாத ஆரம்பத்தில் இலங்கை வருவதாக அறிவித்துள்ளார்.

இலங்கையில் தாம் கலந்துரையாடல்களை நடத்தவிருக்கின்ற விடயப்பரப்புகள் குறித்து அவர் எதனையும் கூறவில்லை.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த போது, டொனால் லூவையும் சந்திருந்தது.

இதன்போது இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாடு உள்ளிட்ட பல்வேறு பரப்புகள் குறித்து ஆராயப்பட்டிருந்தது.