இலங்கை தமிழர் / இந்திய அமைச்சர் கூறும் 7 முக்கிய விடயங்கள்

4 years ago
Sri Lanka
(54 views)
aivarree.com

இந்திய மத்திய வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் வி.முரளீதரன் மக்களவையில் இலங்கை தொடர்பாக வெள்ளிக்கிழமை தெரிவித்த முக்கிய விடயங்கள்

இலங்கை, தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் – இந்தியா தொடர்ந்து அனைத்து மட்டங்களிலும் வலியுறுத்தும்.

இலங்கையில் சில அபிவிருத்தித் திட்டங்களில் சீனாவின் பங்களிப்பை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.

இலங்கை – இந்திய உறவுகள் சுயமானதும் சுதந்திரமானதும் – மூன்றாம் நாட்டுடனான தொடர்பு உறவை பாதிக்காது.

ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், நீதி, சமாதானம் மற்றும் கண்ணியமான வாழ்வுக்கான இலங்கைத் தமிழ் சமூகம் உட்பட சமூகத்தின் அனைத்துப் பிரிவினரின் அபிலாஷைகளுக்கும் இடமளிக்கும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான அதன் முயற்சிகளில் இந்தியா இலங்கையுடன் அனைத்து மட்டங்களிலும் தொடர்ந்து ஈடுபடும்.

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில், இந்த விடயங்களில் இந்தியா உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தியது.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளுக்கு மதிப்பளிப்பது இலங்கையின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பங்களிக்கும்.

தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களுக்கு உகந்தது.