க.பொ.த (உ/த) பரீட்சைகள் ஆரம்பம்

5 years ago
Sri Lanka
(49 views)
aivarree.com

2021ம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தரப்பரீட்சைகள் திங்கள் முதல் ஆரம்பமாகின்றன.

இந்த பரீட்சையானது, எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி வரையில் இடம்பெறும்.

2,437 பரீட்சை மையங்களில் 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

அவர்களில், 279,141 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் அடங்குகின்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற வேண்டிய இந்த பரீட்சைகள் கொவிட் பரவலால் பிற்போடப்பட்டு வந்தது.
—-