வார இறுதியில் 2,618 பேருக்கு கொவிட் 

5 years ago
tamilnewsline.com

இலங்கையில் கடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் மாத்திரம் 2,618 பேருக்கு கொவிட் தொற்றியுள்ளது.

ஜனவரி மாதம் 30ம் திகதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 1000ஐ கடந்தது.

பின்னர் இரண்டு நாட்களில் அந்த எண்ணிக்கை 1200ஆகவும் தற்போது 1300ஐ கடந்தும் நிலவுகிறது. 

கொவிட் நோய்க்காக தற்போது 21 ஆயிரத்து 720 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.