பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படுமா?

5 years ago
Sri Lanka
(111 views)
aivarree.com

லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம் திங்கள் முதல் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.

இதனால் பேருந்து பயணக் கட்டணம் அதிகரிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும் அவ்வாறு அதிகரிக்கப்பட மாட்டாது என்று விடயத்துக்குப் பொறுப்பான ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கடந்த முறை பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்ட போது, புதிதாக எரிபொருள் விலை கூட்டப்பட்டால், கட்டணத்தை மீண்டும் அதிகரிப்பதில்லை என்று பேருந்து சேவை சங்கங்கள் இணங்கி இருப்பதாக அவர் கூறினார்.