இந்திய செய்திகள்

கொரோனா நிவாரண நிதி கொடுத்த ராஜீவ்காந்தி கொலை வழக்கில் உள்ள நளினி! எவ்வளவு தெரியுமா?

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 5000 ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு நபர்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளித்து வருகின்றனர்.

இதில் சேரும் பணம் கொரோனா சம்மந்தமான விடயங்களுக்கு தமிழக அரசால் செலவிடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி கொரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரத்தை வழங்கியுள்ளார்.

நளினி அடைக்கப்பட்டிருக்கும் வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் மூலம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ 5000 வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button