tamilnewsline

தமிழக மீனவர் படகுகள் இலங்கையில் ஏலத்தில்

FILE PHOTO

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 107 படகுகள் திங்கட்கிழமை இலங்கையில் ஏலத்தில் விடப்படுகின்றன.

எவ்வாறாயினும், இவ்வாறு ஏலம்  விடப்படுகின்றமைக்கு தமிழக அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருப்பதோடு, அதனை உடனடியாக நிறுத்துமாறு இந்தியப் பிரதமர் மோடிக்குக் கடிதம் அனுப்பி இருந்தது.

இதுதொடர்பாக இந்திய மத்திய அரசாங்கம் தமது நிலைப்பாட்டை இன்னும் சொல்லவில்லை.

தற்போது வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் இந்தியா சென்று அங்கு பல்வேறு சந்திப்புகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version