வட்டவளையில் பிக்குவால் சிறுவன் துஷ்பிரயோகம்/ மக்கள் போராட்டம்

4 years ago
Sri Lanka
(338 views)
aivarree.com

வட்டவளை – டெம்பஸ்டோவ் தோட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனை, ஹயிற்றி தோட்டத்தில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியுள்ளார்.

இதுதொடர்பாக குறித்த சிறுவனின் தந்தை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைய, குறித்த பிக்கு கைது செய்யப்பட்டார்.

பிக்குவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் க்ளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுள்ளார்.