பானுக ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக SLCக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

4 years ago
SPORTS
(101 views)
aivarree.com

கொழும்பில் உள்ள சிறிலங்கா கிரிக்கெட் (SLC) அலுவலகத்திற்கு முன்பாக கிரிக்கெட் ரசிகர்கள் குழுவொன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவுக்கு எதிரான எதிர்வரும் 20க்கு20 கிரிக்கட் தொடருக்கான தேசிய அணியில் இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக ராஜபக்சவை சேர்த்துக்கொள்ளுமாறு கோரி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.

பானுக ராஜபக்ச கடந்த வாரம் தமது உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற போதிலும், தேவையான தோல் மடிப்பு (Skin folds) நிலையை அடையத் தவறியதால் தேசிய அணியில் சேர்க்கப்படவில்லை.