வடக்கு கடலில் மீண்டும் இந்திய மீனவர்கள் – யாழில் போராட்டம்

5 years ago
tamilnewsline.com

இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் தடை செய்யப்பட்ட படகுகளுடன் மீண்டும் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.


நேற்றும், இன்றும் தமிழக மீனவர்கள் குறித்த கடற்பகுதிகளில் கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததோடு, அவர்கள் யாழ்ப்பாண மீனவர்களின் வலைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.


இந்த செயற்பாட்டைக் கண்டித்து ‘சுப்பர்மடம’ மீனவர்கள் சேதமடைந்த படகுகளைக் கொண்டு பருத்தித்துறை இலக்கம் 51 வீதியை மறித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.