உக்ரைனுடனான எல்லையிலிருந்து துருப்புக்களை நகர்த்துவதாக ரஷ்யா கூறியமை உண்மையில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சமீபத்திய நாட்களில் 7,000 கூடுதல் துருப்புக்களை அங்கு ரஷ்யா குவித்திருப்பதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை ‘எந்த நேரத்திலும்’ ஆக்கிரமிக்க ரஷ்யா ‘தவறான’ சாக்குப்போக்கை வெளியிடக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இராணுவப் பயிற்சிகள் நிறைவடைந்ததையடுத்து உக்ரைன் எல்லையிலிருந்து படைகளை நகர்த்துவதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை என்று மேற்கத்திய நாடுகள் கூறுகின்றன.
