கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சில பாலியல் பிரச்சனைகள் இருக்கலாம்.
ஆனால் கொவிட் தடுப்பூசி ஆண்மைக்குறைவை ஏற்படுத்துகிறது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் எதும் இல்லை என்று உடலியல் வைத்திய விசேட நிபுணர் பிரியங்கர ஜெயவர்தன தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறினார்.
பாலியல் செயலிழப்பு மற்றும் குழந்தையின்மை போன்ற சிக்கல்களைத் தவிர்க்க கோவிட் தடுப்பூசியை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
அதேபோன்று பூஸ்டர் தடுப்பூசியால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
