தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ ரணில் விக்ரமசிங்க முயல்கிறாரா?

4 years ago
Sri Lanka
(103 views)
aivarree.com

தேசிய அரசாங்கம் ஒன்றை நிறுவ ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் நடத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் இந்த தகவல்களில் உண்மையில்லை என அவருக்கு நெருக்கமான தரப்பிலிருந்து அறியக்கிடைக்கிறது.

எனினும் தனிப்பட்ட வகையில் அண்மையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவை ரணில் விக்ரமசிங்க சந்தித்துள்ளார்.

இதன்போது தற்போதைய பொருளாதார சூழ்நிலைகள் குறித்து கலந்துரையாடியதுடன் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டிய வேலைத் திட்டமொன்று குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.