எரிபொருள் களஞ்சியங்கள் முனையத்துக்கு இராணுவ மேஜர்(ஓய்வு) தலைவர்

5 years ago
tamilnewsline.com

இலங்கை எரிபொருள் களஞ்சியங்கள் முனைய நிறுவனத் தலைவராக, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் எம்.ஆர்.டபிள்யு. டி சொய்ஸா நியமிக்கப்பட்டுள்ளார்.

நாலக்க பெரேரா, எரிபொருள் களஞ்சியங்கள் முனைய தலைவர் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டார்.

இதனை அடுத்து, இந்தப் புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்களுக்கு இராணுவ பின்னணி கொண்டவர்களை தலைவர்களாக நியமிக்கப்படுகின்றமை தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.