முதலாவது 20க்கு20 / இலங்கையை அபாரமாக வென்றது இந்தியா

4 years ago
SPORTS
(35 views)
aivarree.com

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது 20க்கு20 கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 62 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.


இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று 200 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்தது.


பதிலளித்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட் இழப்பிற்கு 137 ஓட்டங்களை பெற்று தோற்றது.


ஆட்ட நாயகனாக 56 பந்துகளில் 86 ஓட்டங்களைப் பெற்ற இஷான் கிஷான் தெரிவானார்.