எரிபொருள் எத்தனை நாட்களுக்கு உள்ளது? / அமைச்சர் பதில்

4 years ago
Sri Lanka
(77 views)
aivarree.com

பாராளுமன்றில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாட்டில் தற்போது எரிபொருள் எத்தனை நாட்களுக்கு போதுமான கையிருப்பு உள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் உதய கம்மன்பில,

தற்போது அரசாங்கத்திடம் 10 நாட்களுக்கு ஒக்டென் 92 பெற்றோல், 40 நாட்களுக்கு ஒக்டென் 95 பெற்றோல், 08 நாட்களுக்கு லங்கா ஒட்டோ டீசஸ் மற்றும் 08 நாட்களுக்கு சுப்பர் டீசல் என்பன கையிருப்பில் உள்ளதாக கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் எரிபொருள் தாங்கிய கப்பல்கள் வர உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மின்சார சபைக்கு 6 நாட்களுக்கு போதுமான டீசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.