முட்டையின் விலை குறைந்தது/பண்ணையாளர்கள்

4 years ago
Sri Lanka
(107 views)
aivarree.com

நாட்டில் முட்டைகளின் விலை குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் (AIEPA) தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக நாட்டில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் கோதுமை மா பற்றாக்குறை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக, முட்டை சேமிப்பகங்களில் சுமார் 1.5 மில்லியன் முட்டைகள் காணப்படுவதாக அந்த சங்கம் தெரிவிக்கிறது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால் பேக்கரிகள், உணவு தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைவடைந்துள்ள நிலையில் முட்டை விற்பனையும் குறைந்துள்ளது.

Reported by
Editorial Reporter