மின்வெட்டு சதித்திட்டமா? விசாரணை முன்னெடுப்பு

5 years ago
tamilnewsline.com

முன்னறிவித்தலின்றி கடந்த 3 ஆம் திகதி மின்விநியோகம் தடைசெய்யப்பட்டமை சதித்திட்டமா என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கையின் படி இந்த விசாரணை இடம்பெறுவதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

குறித்த நாளில் மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க தீர்மானம் மேற்கொண்ட பின்னர் மின் தடை செய்யப்பட்ட நிலையில் விசாரணைகள் இடம்பெறுகிறது.

Reported by
Editorial Reporter