கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதோர் பொது இடங்களுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் சுகாதார அமைச்சர் விசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதன்படி முழுமையாக கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டதற்கான ஆதாரத்தை மக்கள் வைத்திருந்தால் மாத்திரமே பொது இடங்களுக்குள் பிரவேசிக்க முடியும்.
எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் இந்த விடயம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன்படி வைத்திய துறையினரால் கொவிட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாதவர்கள் தவிர ஏனைய அனைவரும் தடுப்பூசி அட்டையை வைத்திருக்க வேண்டும்.


