மிதப்பில் விடப்பட்ட ரூபாய் | எகிறப்போகும் டொலர் விலை

4 years ago
Sri Lanka
(131 views)
aivarree.com

இலங்கை ரூபாய் சந்தையில் மிதப்பில் விடப்பட்டுள்ளமையை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உறுதிப்படுத்தியுள்ளார்.

வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகளுடன் புதன்கிழமை இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

அவரது இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சந்தையில் டொலரின் மற்றும் ரூபாயின் பரிமாற்றங்களை முகவர்கள இடைநிறுத்தி இருந்ததாக எகனாமினெக்ஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

அதேநேரம் முகவர்களின் தகவல்படி டொலருடைய பெறுமதியானது இலங்கை ரூபாய் மதிப்பில் ஒரு டொலருக்கு 260 ரூபாவை கடந்து பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதன்கிழமை சந்தை நிறைவடையும் வேளையில் டொலரின் கொள்முதல் பெறுமதி 240 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 255 ரூபாவாகவும் பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.