மிச்சல் பச்செலட் அறிக்கையை பாராளுமன்றில் முன்வைக்க கோரும் சஜித் அணி

4 years ago
Sri Lanka
(34 views)
aivarree.com

இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்செலட் வெளியிட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கோரியுள்ளது.

அது குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று SJB பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க கோரிக்கை விடுத்தார்.

“ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet, மனித உரிமைகள் பேரவையின் 49ஆம் அமர்வில் முன்வைக்கவுள்ள அறிக்கை இலங்கைக்கு கிடைத்துள்ளது.

“அது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்,” என்றார்.