மிகை வரி சட்டமூலத்துக்கு எதிராக உயர்நீதிமன்றில் மனு

4 years ago
Sri Lanka
(37 views)
aivarree.com

அரசாங்கத்தினால் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள மிகை வரி சட்டமூலத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த சட்டமூலம் அரசியல் யாப்புக்கு முரணானது என்று அறிவிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

2 பில்லியனுக்கும் அதிகமான வருடாந்த வருமானத்தை ஈட்டும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரே தடவையில் 25 சதவீத வரியை அறவிடும் வகையில் இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதி என்பவற்றின் நிதிக்கும் வரி அறவிடப்படும் என்று கூறப்படுகிறது.

எனினும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதனை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.