இலங்கையின் முன்னிலை கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேராவின் எல்.பி. ஃபைனன்ஸ் நிறுவனம், மல்ட்டி ஃபினான்ஸ் நிறுவனத்தின் 64.63 சதவீத பங்குகளை கொள்வனவு செய்கிறது.
இதற்கான அறிவிப்பு நேற்று கொழும்பு பங்குவரிவர்தனை நிலையத்திற்கு விடுக்கப்பட்டது.
ஒவ்வொரு பங்கினையும் ரூபா 9.72 வீதம், 400 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்படவுள்ளது.
நிதி நிறுவனங்களை ஒருங்கிணைப்பு செய்யும் மத்திய வங்கியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பங்குகளை கொள்வனவு செய்யும் முறைமை குறித்த அறிவிப்புகள் பின்னர் வெளியாக்கப்படும்.
