ராகம மருத்துவ பீட விடுதியில் தாக்குதல்/ நால்வருக்கு காயம்

5 years ago
Sri Lanka
(56 views)
aivarree.com

ராகம மருத்துவ பீட மாணவர் விடுதிக்குள் இன்று அதிகாலை தாக்குதல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விடுதிக்குள் பிரவேசித்த குழுவினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த 4 மாணவர்கள் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.