ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும் சீனத் தலைவர் ஜி ஜின்பிங்கும் வெள்ளிக்கிழமை பெய்ஜிங்கில் சந்தித்தனர்.
குளிர்கால ஒலிம்பிக்ஸ் சீனாவில் நடக்கின்ற நிலையில், அங்கு சென்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி இந்த சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனைச் சுற்றி ரஷ்யா இராணுவக் கட்டமைப்பை அதிகரிக்கின்றமைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பை வெளியிடுகின்ற சூழ்நிலைக்கு மத்தியில் அவர்கள் சந்தித்தனர்.
இந்த நிகழ்வைக் குறிக்கும் ஒரு கூட்டு அறிக்கையில், மொஸ்கோவும் பெய்ஜிங்கும் பலவிதமான புவிசார் அரசியல் பிரச்சினைகள் குறித்து அலசியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்கள் நேட்டோ விரிவாக்கத்திற்கும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
