துஸ்மந்த சமீர டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை

4 years ago
SPORTS
(15 views)
aivarree.com

இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர, 7 மாதங்கள் டெஸ்ட் போட்டிகளிலிருந்து விலகி இருக்கவுள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கணுக்காலில் அவருக்கு ஏற்பட்டுள்ள உபாதை ஒன்றின் காரணமாக, அவரால் தொடர்ந்து களத்தில் நின்று விளையாடுவதில் சிரமம் உள்ளது.


அதனால் அவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் வரையில் சுமார் 7 மாதங்கள் அவர் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


எனினும் ஒருநாள் மற்றும் 20க்கு20 போட்டிகளில் துஸ்மந்த சமீர தொடர்ந்தும் விளையாடுவார்.