தாய் சிங்கத்தினால் பிறந்த உடனேயே கைவிடப்பட்ட சிங்கக்குட்டி ஒன்று ரிதியாகம சுற்றுலா பூங்காவில் உள்ளது.
நான்கரை மாதங்களான இந்த சிங்கக்குட்டிக்கு டோரா என்று பெயரிடப்பட்டுள்ளது.
இதனைப் பொதுமக்கள் நாளை முதல் நாளாந்தம் காலை 9 மணியிலிருந்து 10.30 வரையிலும், பின்னர் பிற்பகல் 3.30ல் இருந்து 5 மணி வரையிலும் பார்வையிட முடியும்.
பிறந்து நான்கரை மாதங்களே என்பதால் அதனை நாளாந்தம் முழு நேரமும் பொதுமக்கள் பார்க்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
