தமிழ்நாட்டின் “பினிசர்” இந்திய கிரிக்கெட் குழாமில்

4 years ago
SPORTS
(140 views)
aivarree.com

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது.

இந்த போட்டி இந்தியாவின் 1000வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகும்.

இந்த போட்டி தொடருக்காக இணைக்கப்பட்டிருந்த பல வீரர்களுக்கு கொவிட் தொற்றுறுதி ஆகியுள்ள நிலையில் அவர்களுக்கு மாற்றீடாக வேறு வீரர்களை இணைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

இந்த நிலையில் இந்த தொடருக்காக மேலதிக வீரராக இணைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டின் ஃபினிசர் என்று வர்ணிக்கப்படுகின்ற ஷாருக்கான் நாளைய பிரதான குழாமில் உள்வாங்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், இஷான் கிஷானும் இணைக்கப்பட்டுள்ளதுடன் அவர் ரோஹித் ஷர்மாவுடன் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

நாளைய போட்டிக்கான இந்திய குழாம்

Rohit Sharma (capt), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, Rishabh Pant (wk), Deepak Chahar, Shardul Thakur, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Washington Sundar, Ravi Bishnoi, Mohammed Siraj, Prasidh Krishna, Avesh Khan, Ishan Kishan, Shahrukh Khan