கிரிக்கெட் / 5ஆம் தடவையாகவும் உலக கிண்ணத்தை வென்ற இந்தியா

4 years ago
SPORTS
(127 views)
aivarree.com

19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் உலகக்கிண்ணத் தொடரை ஐந்தாவது தடவையாகவும் இந்தியா கைப்பற்றியது.

இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 189 ஓட்டங்களைப் பெற்று சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பதிலளித்தாடிய இந்திய அணி 47.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 195 ஓட்டங்களைப் பெற்று வெற்றி கண்டது.

இந்தியா சார்பாக ஷேக் ரஷீத் மற்றும் நிஷாந்த் சிந்து 50 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தனர்.