யாழ்ப்பாண கடற்பரப்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 21 பேரும், 10 ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
இரண்டு சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட அவர்கள் திங்களன்று பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது அவர்களது சில பொருட்கள் அரசுடைமையாக்கப்பட்டதுடன், மிரிஹானை குடிவரவு தடுப்பு முகாமிற்கு அனுப்பி இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப உத்தரவிடப்பட்டது.
