ஒமிக்ரொன் திரிபு குறைகிறது / புது திரிபு வருகிறது / WHO எச்சரிக்கை

4 years ago
World
(69 views)
aivarree.com

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் மூன்றாவது அலைக்கு வழிவகுத்த ஒமிக்ரொன் திரிபு உலகம் முழுவதும் குறைவடைவதை அவதானிக்க முடிகிறது.

தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் விதித்திருந்த கடுமையான கட்டுப்பாடுகளை நீக்கி வருகின்றன.

ஆனால், உலக சுகாதார அமைப்பு (WHO), ஒமிக்ரொனின் துணை விகாரம் தொடர்பான புதிய கவலையை எழுப்பியுள்ளது.

BA.1, BA.1.1, BA.2 மற்றும் BA.3 ஆகிய திரிபுகள் (விகாரங்கள்) கரிசனைக்குரியனவாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திரிபுகள் தொடர்பாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என WHO அறிவுறுத்தியுள்ளது.