தடையற்ற மின்சாரத்தை வழங்க ஜனாதிபதி உறுதி

5 years ago
tamilnewsline.com

மின்சார உற்பத்திக்கான எரிபொருளை மின்சார சபைக்கு நேரடியாக இறக்குமதி செய்ய, மத்திய வங்கியும் திறைசேரியும் வசதியளிக்கவுள்ளன.

இதற்கான உறுதியை ஜனாதிபதி வழங்கி இருப்பதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

தடையற்ற மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

நாட்டில் தற்போது 7 1/2 மணி நேரம் மின்சார தடை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.