தங்கம், விலை குறைய வாய்ப்பே இல்லை / அடித்துக்கூறும் நகை வர்த்தகர்கள்

4 years ago
Sri Lanka
(114 views)
aivarree.com

சர்வதேசச் சந்தையில் தங்கத்தின் விலை குறைவடைந்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உள்நாட்டிலும் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் உண்மையில் சர்வதேசச் சந்தையில் புதன்கிழமை தங்கத்தின் விலை 27 டொலர்கள் அதிகரித்துள்ளது.

அதேபோன்று டொலரின் பெறுமதி நாளுக்கு நாள் அதிகரிப்பதுடன், இலங்கை நாணயத்தின் பெறுமதி நிச்சயமற்ற நிலையில் இருக்கிறது.

இவ்வாறான சூழ்நிலையில் நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைவதற்கான வாய்ப்பே இல்லை என்றும், விரைவில் தங்க விலை மிகப்பெரிய அளவுக்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தங்க வர்த்தகர்கள் அய்வரி செய்திக்கு தெரிவித்தனர்.

புதன்கிழமை (09) தங்கம் பவுன் ஒன்று 124,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.