மின்விநியோகத் தடை இல்லையாம் / பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை

4 years ago
Sri Lanka
(70 views)
aivarree.com

புதன்கிழமை (09) மின்விநியோகத்தை துண்டிப்பதற்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் கையிருப்பில் இருக்கின்ற எரிபொருளைக் கொண்டு
தேசிய மின்கட்டமைப்புக்கு போதிய மின்சாரத்தை பாய்ச்ச முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் பொதுமக்கள் மாலை 6 மணியில் இருந்து 9 மணி வரையில் மின்சாரத்தை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு கோரியுள்ளது.